ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பாகுபலி' படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இன்று தெலுங்கின் மற்றொரு கமர்ஷியல் இயக்குனரான குணசேகர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சரித்திரப் படமான 'ருத்ரமாதேவி' படத்தின் தமிழ் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளது. இன்று சென்னையில் நடக்கும் ஒரு எளிய நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார் என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி' படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தனித் தனியாக எடுத்துள்ளனர். ஆனால், 'ருத்ரமாதேவி' படம் அப்படி எடுக்கப்பட்ட ஒரு படமா என்பதை இயக்குனர் இதுவரை அறிவிக்கவில்லை. கோலிவுட்டில் இந்தப் படம் ஒரு முழுமையான டப்பிங் படமாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கில் நேரடியாகவும் தமிழ், மலையாளத்தில் டப்பிங்காகவும் இந்தப் படம் வெளியாக உள்ளது. சுமார் 75 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் 'பாகுபலி'க்கு எந்த விதத்திலும் போட்டியாக இருக்க முடியாது டோலிவுட் கலைஞர்களே தெரிவிக்கிறார்கள். 'பாகுபலி' படத்தின் பட்ஜெட் 250 கோடி என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்திற்கான கிராஃபிக்ஸ் காட்சிகள் உலகத் தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் 'ருத்ரமாதேவி' படம் அந்த விதத்தில் இருக்க வாய்பிப்ல்லை என்றே சொல்கிறார்கள்.
இருந்தாலும், கதையும், திரைக்கதையும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அனுஷ்கா நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'அருந்ததி' படத்தின் வெற்றியை விட இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.