ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆட்டா எனும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விபா. தமிழில், லீலை, நான் போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்தவர், ''மதில் மேல் பூனை'' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் நடிகர் அரவிந்த்சாமியின் சித்தி மகள் ஆவார். நடிகை மதுபாலா போன்ற சாயல் விபாவுக்கு இருப்பதால், விபாவுக்கு தமிழில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுப்பற்றி செய்திகள் கோடம்பாக்கத்தில் வெளியானதை தொடர்ந்து அவரை போனில் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை, அவரது அம்மா போனை எடுத்து பேசினார். அப்போது விபாவுக்கு திருமணம் நடந்தது உண்மை தான் என்றும், இனி படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்று மட்டும் கூறிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார்.
விபா, திருமணம் செய்தது யாருக்கும் தெரியாது. ஏன் உடன் நடித்த சக நடிகர்களுக்கு கூட தெரியாது. விபா ஏன்.? இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
விபா நடிப்பில் தற்போது பேசு மற்றும் சிப்பாய் படங்கள் வெளிவர இருக்கிறது.