சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகானும், கரீனா கபூரும். இருவரும் இதற்கு முன்னர் எல்ஓசி கார்கில், தஷான், ஓம்காரா, குர்பான், ஏஜென்ட் வினோத் போன்ற படங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறது. விக்ரமாதித்யா மோத்வானி எடுக்க இருக்கும் படத்தில் தான் இருவரும் நடிக்க உள்ளனர். பாலிவுட்டின் மற்றொரு முகத்தை காட்டுவது போன்று பாலிவுட் நட்சத்திரங்களின் இன்னொரு வாழ்க்கையை இப்படம் வெளிப்படுத்தும். இப்படம் தொடர்பாக சைப்பிடமும், கரீனாவிடமும் விக்ரமாதித்யா நேரில் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் ஓ.கே. சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சைப் விஷால் பரத்வாஜின் ரங்கூன் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்த பின்னர் விக்ரமாதித்யா படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.