டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மணிகண்டன் இயக்கத்தில், தேசியவிருதுகள் பெற்ற படம் காக்கா முட்டை. இப்படம் இதுவரை 9 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற ஒரு படத்தின் கதை மிகவும் எளிமையானது. பீட்ஸா மீது ஆசைப்படும் சிறுவர்கள் இருவர் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் கிடைத்த பீட்ஸாவை சாப்பிட்ட போது ருசிக்கவில்லை. இந்தக்கதை கருவை எங்கிருந்து பெற்றீர்கள் என்று இயக்குநர் மணிகண்டனைக் கேட்டால், தன் மகனிடமிருந்துதான் என்கிறார். எப்படி என்ற போது...
"என் மகன் பெயர் எழிலன், இப்போது அவனுக்கு 9 வயது ஆகிறது. அவனுக்கு அப்போது ஆறுவயது இருக்கும். பீட்ஸா வேண்டும் என்று பல நாள் நச்சரித்து வந்தான். அதன் தோற்றத்தில் கலரில் அவனுக்கு அவ்வளவு மோகம். வாங்கித் தந்த போது ஒரு வாய் கடித்து சாப்பிட்டான் உதட்டைப் பிதுக்கி மேலும் சாப்பிட முடியாமல் சாப்பிடப் பிடிக்காமல் விழி பிதுங்கினான். அவனுக்குப் பிடிக்கவில்லை. எனக்கு கோபம் கோபமாக வந்தது. இப்படி விளம்பர மோகத்தில் தான் சிறுவர்கள் தூண்டப்பட்டு பொருள்களை வாங்குகிறார்கள். அதை விளம்பரப்படுத்தும்போது சிறுவர்களைக் கவரும்படி உளவியல் ரீதியாக தூண்டும்படி பெரிய கூட்டத்தினரே திட்டமிட்டு விளம்பரங்களை வடிவமைக்கிறார்கள். இந்த உருப்படாத கதைக்குதவாத பொருள்களை தின்னும் போது விளம்பரத்தில் நடிப்பவர்களின் நடிப்பு இருக்கிறதே அது உலகமகா நடிப்புடா சாமி. ஏதோ தெய்வீக இனிப்பாக ருசியான பொருள்களை தின்பது போல அப்படி ஒரு முகபாவனை காட்டுவார்கள்.
இப்படித்தான் சிறுவர், பெண்கள் பயன்படுத்தும் பொருள்களை விளம்பரத்தில் கவர்ந்து வியாபாரம் செய்கிறார்கள். இந்த விளம்பர அரசியலை பற்றிச் சிந்தித்த போதுதான் இந்தக் கதை உருவானது. " என்கிறார்.
படப்பிடிப்பு அனுபவம் பற்றிக் கேட்ட போது, இது வெறும் 61 நாட்களில் முடிக்கப்பட்ட படம். நானே ஒளிப்பதிவாளராக வேலை செய்ததால் கேமராவைத்தோளில் சுமந்து தோள்பட்டை வலி பயங்கரமாக வந்து விட்டது. விருதுகள் வந்த பின் வலிகள் சுவடே தெரியவில்லை. இப்போதும் தொடரும் பாராட்டுகளும் விருதுகளும் எல்லா வலிகளையும் போக்கிவிட்டன.
இந்தப் படத்தின் வெற்றி பலருக்கும் நல்லவித புதுமுயற்சிகளுக்கு துணிவைக் கொடுத்து இருக்கிறது. இதை மக்கள் ரசிப்பார்களா ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கத்துடன் தங்களது அருமையான படைப்புகளை கடைசிவரை எடுக்க முடியாமல் போன படைப்பாளிகளை நினைத்து வருத்தப்படுகிறேன். ரசிகர்கள் புத்திசாலிகள்தான்
நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொண்டும், ரசிகர்களையும் ஏமாற்றிக் கொண்டும் இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. என்கிற இந்த உசிலம்பட்டிக்காரர் தன் அடுத்த படமான குற்றமே தண்டனை யை சைக்கிள் கேப்பில் எடுத்து முடித்து விட்டார்.