அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
செங்காத்து பூமியிலே படம் மூலம் இசைஞானி இளையராஜா விநியோகஸ்தர் ஆகிறார். கிழக்கு சீமையிலே, கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ரத்னகுமார் இயக்கும் புதிய படம் செங்காத்து பூமியிலே. இந்த படத்தை இதுவரை 902 படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா சுவாமி சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இதுபற்றி டைரக்டர் ரத்னவேல் கூறுகையில், தென் மாவட்டங்களில் நடக்கும் சம்பவங்களையும், வாழ்க்கை முறைகளையும் இந்த படத்தில் வித்தியாசமான கோணத்தில் படமாக்கியிருக்கிறோம். மனித உறவுகள் பற்றிய உணர்வையும், உறவுகளுக்குள் ஏற்படும் முரண்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறோம். பவன், செந்தில், சிங்கம் புலி, அழகன் தமிழ்மணி, வெள்ளையாண்டி தேவர், ராஜதுரை ஸ்டாலின், பிரியங்கா, சுனுலட்சுமி, டி.கே. கலா, அஞ்சலி தேவி ஆகியோருடன் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100 புதுமுகங்களும் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள், என்றார்.
இந்த படத்தை பார்த்த இளையராஜா, தனது கைப்படி ஒரு வாழ்த்தினை எழுதி டைரக்டரிடம் கொடுத்திருக்கிறார்.
பட்டி தெட்டி மட்டுமில்ல...
நாடு நகரம் மட்டுமில்ல...
பாரத நாடு மட்டுமில்ல...
உலகம் எங்கும்
உயிர் கொலையை கண்டிக்கும் ஒரே திரைப்படம்
செங்காத்து பூமியிலே!
- என்று எழுதி கையெழுத்திட்டு கொடுத்திருக்கும் இளையராஜா, முதலில் இப்படத்திற்கு இசையமைக்க யோசித்தாராம். 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு வாருங்கள். படத்தை பார்த்து விட்டு இசையமைக்கிறேன் என்று இசைஞானி சொன்னதையடுத்து, 10 நாள் சூட்டிங் முடித்து அதனை போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர். காட்சியமைப்புகள் பிடித்துப் போனதால் இசையமைக்க சம்மதித்திருக்கிறார் இளையராஜா.
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார்.