ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
நயன்தாராவைப் பொறுத்தவரை அத்தனை எளிதில் யாரையும் புகழ்ந்து விட மாட்டார். அதோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால், மற்ற நடிகைகளை மாதிரி டயலாக்கை மனப்பாடம் செய்வது, ரிகர்சல் பார்ப்பது என்றும் அலம்பல் பண்ண மாட்டார். ஆனால் டைரக்டர் ஆக்ஷன் சொன்னதும் தேவையான நடிப்பை கொடுத்து விட்டு அலட்டிக்கொள்ளாமல் போய் உட்காருவார். அந்த வகையில், கால்சீட் விசயத்தில் முன்னபின்ன நடந்து கொண்டாலும், பர்பார்மென்ஸ் விசயத்தில் பின்னி எடுத்து விடுவார் நயன்தாரா. அதனால்தான் அவர் கேட்ட சம்பளத்தைகூட தயாரிப்பாளர்களிடம பேசி வாங்கிக்கொடுக்கிறார்கள் டைரக்டர்கள்.
அப்படிப்பட்ட நயன்தாரா, தனுஷ் தனது நண்பர் என்பதால் அவர் தயாரிப்பில் விஜயசேதுபதியுடன் நடித்துள்ள நானும் ரெளடிதான் படத்திற்கு மற்ற படங்களை விட குறைவான சம்பளமே வாங்கியிருக்கிறாராம். அதேசமயம் அவர்கள் ஏற்கனவே கேட்டதை விடவும் கூடுதலான நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்துள்ளாராம்.
மேலும், விஜயசேதுபதி ஜூனியர் நடிகர் என்றபோதும் அந்த படத்தில் அவருடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தாராம் நயன்தாரா. அதோடு, படப்பிடிப்பு தளத்தில் சிலர் விஜயசேதுபதியின் பர்பாமென்ஸ் பற்றி அவரிடத்தில் கேட்டபோது, அவருக்கென்ன சூப்பர் ஹீரோ. எத்தனை வெயிட்டான சீன் என்றாலும் அசத்தலாக நடிக்கிறார் என்று சொன்னாராம். அதுவும் விஜய சேதுபதியின் காதில் விழுவது போன்று சத்தமாக சொன்னாராம் நயன்தாரா.