ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் ஹரீஷ். சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக ஜெயிக்க தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இவர் மறைந்த எடிட்டர் குமாரின் மகன் ஆவார். குமார், புன்னகை மன்னன், சிந்து பைரவி, பாட்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். ஹரீஷ்க்கும், குமார்-சாந்திதேவியின் மகளான டாக்டர் அபிநயாவுக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவாகி சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயமும் நடந்தது. இதனையடுத்து குருவாயூரில் இன்று(ஜூன் 4ம் தேதி) ஹரீஷ்-அபிநயாவின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் சிறப்பாக நடந்தது. மணமகள் அபிநயா கழுத்தில், மணமகன் ஹரீஷ் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.