ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு கதாநாயகி நடிகை இன்னொரு நடிகையை சிபாரிசு செய்வது என்பது அபூர்வமான விஷயம். தான் நடிக்கும் படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடிக்க சக நடிகையை சிபாரிசு செய்தால், எங்கே தன்னை காலி பண்ணிவிடுவார்களோ என அஞ்சுவார்கள். இந்த விஷயத்தில் த்ரிஷா வித்தியாசமானவர். விதிவிலக்கானவர். பரத் நடித்த சேவல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அப்படத்தைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, எதிரி எண் 3 என பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். இவற்றில் எந்தப்படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. பொங்கலுக்கு வெளிவந்த சுந்தர்.சியின் 'ஆம்பள' படத்தில் விஷாலுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'ரோமியோ ஜூலியட்'டில் ஹன்சிகாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடித்திருக்கிறார். தற்போது, த்ரிஷாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் 'போகி' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் பூனம் பாஜ்வா. அப்போது த்ரிஷா உடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் அரண்மனை-2 படத்தில் இன்னொரு கதாநாயகி வேடம் இருப்பதை அறிந்து அந்த வேடத்துக்கு பூனம்பாஜ்வாவை சிபாரிசு செய்துள்ளார் த்ரிஷா.