எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
பொங்கலுங்கு ரிலீசாகும் படங்களில் காவலன் படமும் ஒன்று, ஆனால் காவலன் படத்த்தை வெளியிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் விஜய்யே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார். காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது பொங்கலும் வந்துவிட்டது. ஆனால் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. நடிகர் விஜய்க்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான பிரச்னை, இப்போது திசை மாறி தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையேயான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை பார்த்து கொதிப்படைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ் என்று ஓப்பனாக பேசிவிட்டார். எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று அதிரடியாக கூறிவிட்டார். அதன் விளைவு, படத்தை அவரே நேரடியாக வெளியிட இருக்கிறார். ஷக்தி சிதம்பரத்திற்கு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு அவரிடமிருந்து படத்தை வாங்கி விஜய்யும், பிரபல பைனான்ஸியர் ஒருவரும் சேர்ந்து வெளியிட இருக்கின்றனர்.
இதனையடுத்து காவலன் படம் இந்த பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீசாக உள்ளது. படத்தை நாளை வெளியிடாமல் பொங்கல் அன்று (15ம் தேதி) வெளியிடுகின்றனர்.