எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ, மெளனம் பேசியதே உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன். தற்போதும் இளட்ட பாடலாசிரியர்களுக்கு மத்தியில் தானும் அவ்வப்போது பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் அவர். இந்தநிலையில், விரைவில் வெளிவரயிருக்கும் திருட்டு ரயில் என்ற படத்தில் மொத்த பாடல்களையும் காமகோடியனே எழுதியிருக்கிறார். அதுவும் பழைய பாணியிலேயே இந்த படத்திற்கு கம்போசிங் செய்து பாடல்கள் எழுதியிருக்கிறாராம்.
இதுபற்றி காமகோடியன் கூறுகையில், நான் சினிமாவில் பாடல்கள் எழுத வந்த காலகட்டத்தில் பாடல்கள் எழுதுவதற்கு இசையமைப்பாளர்கள் கம்போசிங் செய்யும் இடத்துக்கே அழைப்பார்கள். அவர்கள் டியூன் போட போட நாங்கள் பாட்டு எழுதிக்கொடுப்போம். ஆனால், இப்போதைய சினிமாவில் கம்போசிங் என்பதே இல்லை. இசையமைப்பாளர், இயக்குனர்கள் யார் என்பதே தெரியவில்லை. ஒரு டியூன் கேசட்டை கொடுத்து இந்த சூழலுக்கு பாடல் எழுதிக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். எழுதி கொடுத்த பிறகு பாடல் ரெக்கார்டிங் நடக்கும்போதுகூட பாடலாசிரியர்களை அழைப்பதில்லை.
இப்படி மாறிவிட்ட காலத்திலும் இந்த திருட்டு ரயில் படத்துக்கு இசையமைப்பாளர் ஜெய்பிரகாஷ் அனைவர் முன்னிலையிலும் கம்போசிங் நடத்தினார். அப்போதுதான் என்னை அழைத்து பாடல் எழுத வைத்தார். அதனால்தான் இந்த படத்துக்கு நான் எனது ஆரம்ப காலத்தைப்போலவே மிகவும் ரசித்து பாட்டெழுதிக்கொடுத்தேன் என்று கூறும் காமகோடியன், இந்த சினிமாவில் நான் மூன்று தலைமுறை கவிஞன். ஆனபோதும், இப்போதும் எனது மனநிலை இளமையாகவே உள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்தமான வார்த்தைகளைக்கொண்டு என்னாலும் பாடல் எழுத முடியும் என்கிறார்.