மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
கோலிவுட் இயக்குநர்களின் பார்வை தற்போது சீனாவின் பக்கம் திரும்பி உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த ஷங்கரின் 'ஐ' படத்தில் பெரும்பாலான காட்சிகள் சீனாவில்தான் படமாக்கப்பட்டன. குறிப்பாக விக்ரம், எமி ஜாக்ஸன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் மற்றும் விக்ரம் உடன் சீனாவைச் சேர்ந்த அடியாட்கள் மோதும் சண்டைக்காட்சி உட்பட பல காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டது. சீனாவின் லொக்கேஷன்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தது. அதுமட்டுமல்ல, இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
ஐ படத்தைப் பார்த்தபோது, நடிகர் விஜய்க்கும் 'ஐ' படத்தில் இடம்பெற்றிருந்த சீனாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் மிகவும் பிடித்துப்போனதாம். எனவே அடுத்து தான் நடிக்கும் படத்தின் பாடல்காட்சியை, சீனாவுக்கு சென்று எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இந்த ஆசையை இயக்குனர் அட்லியிடம் தெரிவித்திருக்கிறார் விஜய். அசரது விருப்பத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் சொல்லி இருக்கிறார் அட்லி. தாணு டபுள் ஓகே சொல்லிவிட்டார்.
தற்போது 'புலி' படத்தை முடித்துள்ள விஜய், சில வாரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு, ஜூலை இறுதியில் அட்லி இயக்கும் படத்தில் கலந்து கொள்கிறார்.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புக்காக... அதாவது... பாடல் காட்சிகளுக்காக விஜய், ஹீரோயின் சமந்தா அட்லி உள்ளிட்ட 'விஜய் 59' படக்குழு சீனாவுக்கு பறக்க உள்ளது.