ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் அடுத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது இரண்டு படங்கள். ஒன்று விஜய் நடித்து வரும் 'புலி'. இரண்டாவது அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படம். விஜய் நடிக்கும் 'புலி' படம் முதலில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை செப்டம்பர் மாதம் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமையாக இருப்பதால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் இல்லாததால் படத்தின் வசூல் பாதிக்கும் என்று நினைக்கிறார்களாம். ஆனால், செப்டம்பர் 17ம் தேதி வியாழக்கிழமையாக இருப்பதால் அடுத்தடுத்து நான்கு நாட்களில் படத்தின் வசூலை அள்ளிவிடலாம் என நினைக்கிறார்களாம். படத்தின் முதல் பார்வையை வெளியிடும் போது பட வெளியீடு பற்றி அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.
'வீரம்' படத்திற்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு வழக்கம் போல இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி நவம்பர் மாதம் 10ம் தேதி செவ்வாய்க் கிழமை வருகிறது. எப்படியும் வார இறுதி வரை தீபாவளி கொண்டாட்டம் இருக்கும் என்பதால் படத்தின் வசூலும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம். இல்லையென்றால் படத் தயாரிப்பாளரின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி நவம்பர் 12ம் தேதி படம் வந்தாலும் வரும் என்கிறார்கள்.