ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் அறிமுக இயக்குநர் ராம் பிரசாத் இயக்கும் ஐனா இஷ்டம் நுவ்வு என்ற படத்தில், நவீன் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கின்றார். பிரண்ட்லி மூவிஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டோலிவுட்டின் இளவரசன் மகேஷ் பாபுவையும் கவர்ந்துள்ளது. இதனை மகேஷ் பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐனா இஷ்டம் நுவ்வு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிக்கும்படி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நவீன் மற்றும் படக்குழுவினருக்கு மகேஷ் பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார். நவீன் மகேஷ் பாபுவின் அண்ணன் நரேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.