ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வேல்ராஜின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். விஐபி - 2 என்று அழைக்கப்பட்டாலும் இன்னும் அதிகாரபூர்வமாக இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். தனுஷின் அப்பாவாக கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் விஐபி -2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். தனுஷ், எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் ஷெட்யூலில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஷெட்யூலில் சமந்தா, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு வந்தன.
தற்போது இரண்டாவது ஷெட்யூலும் முடிவடைந்து விட்டது. ''விஐபி டீமின் பெயரிடப்படாத படத்தின் தற்போதைய ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது. சமந்தாவுடன் வேலை செய்தது ஒரு ஜாலியான அனுபவம்!'' என்று தனுஷ் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் 'வட சென்னை' படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3 வது படம் இது. 'வடசென்னை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. 2016-ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் ! 'வடசென்னை' படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது.