ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி படத்தை சி.வி.குமாருடன் இணைந்து தயாரித்த செல்வராஜ், தனது கெனனி மூவீஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கும் படம் ஒரு நாள் கூத்து. இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மியா ஜார்ஜ் ஹீரோயினாக நடிக்கிறார். இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த நிலையில் படத்தின் இன்னொரு ஹீரோயினாக நிவேதா பெத்தராஜ் நடிக்க இருக்கிறார். இவர் 2015ம் ஆண்டில் மிஸ்.யுஏஇ பட்டம் வென்றவர்.
"படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மியா ஜார்ஜ் ஒருவர். அவர் தன் பகுதியை நடித்துக் கொடுத்து விட்டார். இன்னொரு முக்கியமான ஹீரோயின் கேரக்டருக்கு நன்கு தமிழ் பேசத்தெரிந்த, அழகான, நடிக்கத் தெரிந்த புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது நண்பர் ஒருவர் மூலம் கிடைத்தவர்தான் நிவேதா. 13 வருடங்கள் துபாயில் இருந்தாலும் அக்மார்க் தமிழ் பொண்ணு. அழகாக தமிழ் பேசுகிறார். அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அதில் தினேசுடன் நிவேதா நடிக்கிறார். என்றார் இயக்குனர் நெல்சன்.