ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பெல்லாம் கமல் படம் என்றால் கண்டிப்பாக ஒரு லிப் டு லிப் முத்தக்காட்சி இருக்கும் என்றுதான் இளைஞர்கள் அவரது படங்களைப் பார்க்கவே செல்வார்கள். இதை தெரிந்து கொண்ட கமலும், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் கதாநாயகிகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வந்தார். இருப்பினும், ஒருகட்டத்தில் காதல் இளவரசன் என்ற அடைமொழியில் இருந்து விலகி உலகநாயகனாக கமல் உருவெடுத்தபோது, முத்தக்காட்சிகளை குறைத்து வந்தார். இப்போதும் சில படங்களில் தான் முத்த ஸ்பெசலிஸ்ட் என்பதை அவ்வப்போது அவர் ஞாபகப்படுத்தினாலும் பழைய வேகம் அவரிடம் இல்லை. ஆனால், தற்போது தனது உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் தூங்காவனம் படத்தில் நடித்து வரும் கமல், இந்த படத்தின் நாயகியான த்ரிஷாவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கிறாராம். அதுவும் புதிய எனர்ஜியுடன். இன்னும் அந்த காட்சி படமாக்கப்படவில்லை என்றாலும், போட்டோ ஷூட் நடத்தியபோது த்ரிஷாவை அவர் உதட்டு முத்தம் கொடுப்பது போன்று போட்டோ எடுக்கப்பட்டுள்ளதாம். ஆக, முன்பு மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடித்தபோது அந்த பாக்கியத்தை பெறாத த்ரிஷா, இந்த படத்தில் அதற்கும் சேர்த்து பெற்று விடுவார் என்கிறார்கள்.