ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை லைலா மற்றும் நடிகர் பிரசன்னா நடித்த 'கண்ட நாள் முதல்' படத்தில் லைலாவின் தங்கையாக நடித்த ரெஜினா கஸன்ட்ரா பல படங்களில் நடித்திருந்தாலும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பின்னர் தான் அறியப்படும் நடிகையானார். அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்ட துவங்கினார். டோலிவுட்டில் ரெஜினா செம கிளாமராக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ரெஜினா நாயகியாக நடித்து வெளிவந்த 'ரா ரா கிருஷ்ணய்யா' படத்தில் நாயகன் சந்தீப்புடன் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதும் ஒரு வகையில் அவரது பட வாய்ப்புகள் அதிகரித்ததற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. சுப்ரமணியம் பார் சேல் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரெஜினா தற்போது நடிகர் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை ரஷி கண்ணா தானாம். தற்போதைய நிலவரப்படி நடிகை ரஷிக்கு பதில் ரெஜினா படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.