ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லாரன்ஸ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் காஞ்சனா-2. இந்த படத்தில் தனது தம்பி எல்வினையும் ஒரு பாடலில் நடனமாட வைத்து டிரையல் பார்த்தார் லாரன்ஸ். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, அடுத்து எல்வின் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் பல டைரக்டர்கள் கதைகளுடன் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால், தற்போது தனக்கான கதைகளை ஒரு பக்கம் கேட்டு வரும் லாரன்ஸ், இன்னொரு பக்கம் தம்பிக்கான கதையையும் கேட்டு வருகிறார். முதல் படமே தம்பிக்கு மெகா ஹிட்டாக அமைய வேண்டும் என்பதால் பல கதைகளைக்கேட்டு அதில் ஒன்றை செலக்ட் பண்ணப்போகிறாராம். மேலும், ராகவா லாரன்சின் தம்பி ஹீரோவாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து சில மெகா பட நிறுவனங்களே அவரை வைத்து படம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம். அந்த வகையில், லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் எல்வின் அறிமுகமாக அதிக வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது.