மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
டோலிவுட்டில் மார்கெட் இழந்த நடிகையாக அறியப்பட்ட சார்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், சார்மி விட்ட தனது இடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என்று உற்சாகமடைந்துள்ளார். இம்மாத இறுதியில் திரைக்கு வரும் ஜோதிலக்ஷ்மி படத்தைத் தொடர்ந்து சார்மி நடித்துள்ள மந்தரா 2 படம் ஜூன் முதல் வாரத்தில் திரைக்கு வரவுள்ளதாம். திகில் திரைப்படமான இப்படத்தை இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். நடிகர்கள் சேத்தன், தனிகேல்லா, ராகுல் தேவ், உட்டேஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கிரீன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சுனில் கஷ்யப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.