ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு பிறகு இருநாட்டின் நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வௌிப்பாடாக இந்திய-சீனா இணைந்து இருநாட்டு கலாச்சாரத்தையும் வௌிப்படுத்தும் விதமாக படங்கள் தயாரிக்க உள்ளது. அதில் முக்கியமான படம், சீன தற்காப்பு கலையான குங்பூவையும், இந்திய பாரம்பரிய அடையாளமான யோகாவையும் இணைத்து குங்பூ யோகா என்ற படம் உருவாக உள்ளது. இதில் அமீர்கானும், ஜாக்கி சானும் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வந்தது. ஆனால் இப்போது இந்தப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று அமீர்கான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமீர்கான் கூறியுள்ளதாவது, இந்திய-சீனா கூட்டு தயாரிப்பு படத்தில் ஜாக்கி சான் நடிப்பது உண்மை தான். ஆனால் நான் நடிக்கவில்லை. தற்போது நான் நடித்து வரும் டங்கல் படத்தி்ன கால்ஷீட் பிரச்னையால், ஜாக்கி சான் படத்தில் நடிக்க முடியவில்லை. அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை வேறு எந்த படத்திலும் நான் நடிக்க முடியாது. ஜாக்கி சான் படத்தில் நடிக்க முடியாதது வருத்தம் தான். எதிர்காலத்தில் இதுபோன்று வேறு ஒரு கதைகள் அமையும் பட்சத்தில் நிச்சயமாக நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.