ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சுதீர் பாபு நாயகனாக நடித்துள்ள மோசகலக்கு மோசகடு படம் மே மாதம் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் சுதீர் பாபுவின் மகன் சரித் மானஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சரித் மானஸ் இளம் வயது சுதீர் வேடத்தில் நடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சுதீருக்கு ஜோடியாக நடிகை நந்தினி நடித்துள்ளார். இவர்களுடன் அபிமன்யா சிங், ஜெய பிரகாஷ் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் போஸ் நெல்லூரி இயக்கியுள்ளார். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் சுதீர் பாபு தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.