சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு ஹீரோயின், கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கி விட்டால் அதன்பிறகு அவருக்கு கதாநாயகி வேடம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், மலையாளத்தில் அப்படியில்லை. கதாநாயகியாக நடிப்பவரே தங்கை வேடங்களில் கூட நடிப்பார். அழுத்தமான கதாபாத்திரம் என்றால் எல்லாவிதமான ரோல்களிலும் நடிப்பார்கள்.
அதேபோல் அங்குள்ள டைரக்டர்களும் தங்கையான நடித்த நடிகையை பின்னர் கதாநாயகியாக நடிக்க வைக்க தயங்க மாட்டார்கள். எல்லாவிதமான கேரக்டர்களிலும் தொடர்ந்து நடிக்க வைப்பார்கள். அதனால் மலையாள நடிகையான லட்சுமிமேனனும் இனிமேல் கதாநாயகி வேடம் என்பது மட்டுமின்றி, வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிக்கப்போகிறாராம்.
தற்போது அஜீத்தின் 56வது படத்தில், அவரது தங்கையாக நடித்து வருபவரிடம், இதன்பிறகு தமிழில் உங்களுக்கு கதாநாயகி வேடம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று சிலர் கேட்டதற்கு, எனக்கு கதாநாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் ஒருபோதும் இருந்ததில்லை. என்னைத்தேடி வந்த வேடங்களில் நல்லதாக செலக்ட் பண்ணி நடித்தேன். இப்போது அஜீத் படத்தில் சான்ஸ் கிடைத்திருக்கிறது. அந்த தங்கை வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் நடிக்கிறேன். தொடர்ந்து கதாநாயகி, தங்கை வேடம் மட்டுமின்றி, வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார் லட்சுமிமேனன்.