ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதும் உறுதியான தகவல்தான். ரஜினி புதிய படம் தொடங்குவதற்கு முன் வதந்திகள் றெக்கைக்கட்டிப் பறக்கும். அவற்றில் எது உண்மை.. எது பொய் என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியும். அந்த வகையில் ரஜினி தற்போது நடிக்க உள்ள புதிய படம் பற்றியும் பல்வேறு செய்திகள் அடிபடுகின்றன. ரஜினி அடுத்து நடிக்க இருப்பது பாட்ஷா டைப்பான கதை என்பதும் அவற்றில் ஒன்று...! பா.ரஞ்சித் தரப்பில் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில் இன்னொரு பாட்ஷா செய்தி. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் தல 56 படமே பாட்ஷா படத்தின் ரீமேக் என்ற தகவல் அடிபடுகிறது. இந்த விஷயத்தை பட வெளியாகும்வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்களாம். தல 56 படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.