ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ். ஜித்தன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்த பல படங்களில் நடித்தார். எந்தப்படமும் ஓடவில்லை. எனவே கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகனான ஜீவாவோ பல தோல்விப்படங்களில் நடித்தாலும், ஹீரோவாக இன்னமும் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார். தம்பியின் அளவுக்குக் கூட தன்னால் வர முடியவில்லையே என கவலைப்பட்ட ஜித்தன் ரமேஷ், தனக்கு வெற்றிப்படமாக அமைந்த ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து, அதில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க திட்டமிட்டிருந்தார். தனக்கு மார்க்கெட் வேல்யூ இல்லை என்பதை உணர்ந்திருந்த ரமேஷ், மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவை இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க தீர்மானித்தார். இந்த ஐடியாவை விஷாலிடம் சொல்லி அவரை நடிக்கக்கேட்டிருக்கிறார். விஷால் யோசித்து சொல்வதாகச் சொல்ல, அதற்குள் ஜித்தன்-2 படத்தில் விஷால் நடிப்பதாக மீடியாக்களில் செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் ஜித்தன்-2 படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.