ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயற்கை பேரழிவுகளை மையமாக வைத்து படம் எடுப்பது என்றால் ஹாலிவுட்காரர்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி, எரிமலை, சுனாமி, புயல் பற்றி நிறைய படம் வந்திருக்கிறது. பூகம்பம் பற்றியும் நிறைய படங்கள் வெளிவந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எர்த்குவாக் என்ற படம். இப்போது அதனையும் முறியடிக்கும் வகையில் 100 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவாகி வருகிறது சான் ஆன்ட்ரியாஸ்.
பூகம்பம் எங்கு நடந்தாலும் அந்த இடத்துக்கு ஓடிச்சென்று மக்களை காப்பாற்றுவதோடு, அடுத்த பூகம்பம் எப்போது வரும் எங்கே வரும் என்று கணித்துச் சொல்கிறவர் டுவைன் ஜான்சன் (ஹீரோ) லாஸ்ஏஞ்சல்சின் தீயணைப்பு துறையின் ஹெலிகாப்ட்டர் பிரிவின் தலைவர்.
உலகின் மிகப்பெரிய பூகம்பம் கலிபோர்னியாவில் நடக்கிறது. மீட்பு பணிக்காக அங்கு செல்லும் டுவைன் அடுத்து சான்பிரான்சிஸ்கோவில் பூகம்பம் வர இருப்பதை கண்டுபிடிக்கிறார். அங்குதான் அவரது மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள். பூகம்பத்தை யாரும் தடுக்க முடியாது. ஆனால் பூகம்பம் வருவதற்குள் மக்களை வெளியேற்றி காப்பாற்ற முடியும். ஹீரோ விரைந்து செயல்பட்டு சான்பிரான்சிஸ்கோ மக்களையும், மனைவி குழந்தைகளையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
ஹீரோ டுவைன் ஜான்சன், மம்மி ரிட்டன்ஸ், தி கார்பியன் கிங், பாஸ்ட் பியூரியஸ் படங்களின் நாயகன், ப்ராட் பெய்டன் இயக்கி உள்ளார். ஸ்டீவ் எட்லின் ஒளிப்பதிவு செய்துள்ளார். உலகம் முழுவதும் பூகம்ப பீதி பரவிக்கிடக்கும் இந்த நேரத்தில் படம் வெளியாகிறது. இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.