ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். தற்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல், நய்யாண்டி, பொறியாளன், கொம்பன், வை ராஜா வை என செலக்டீவான படங்களில் மட்டுமே பணியாற்றியவர். இதுதவிர இந்தி, மலையாளத்திலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த வேல்ராஜைப் பொறுத்தவரை ஒரு கொள்கை வைத்திருக்கிறாராம். அதாவது எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும் அதன் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொள்வாராம். அப்படி இல்லையேல், மறத்து விடுவாராம். மேலும் கதை பிடித்து விட்டால் கதை விவாதத்திலும் அவ்வப்போது கலந்து கொண்டு தனக்கு தோன்றும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வாராம் வேல்ராஜ்.