ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபி சிம்ஹா, லட்சுமிராய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கிலும் இயக்குநர் பொம்மரிலு பாஸ்கர் இயக்கி வருகின்றார். தெலுங்கில் சர்வானந், நித்யா மேனன், வருண் தேஜ், ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் டோலிவுட்டின் விருப்ப நாயகி ராகுல் ப்ரீத்தி சிங்கும் நடித்து வருகின்றார். மலையாளத்தில் நடிகை பார்வதி மேனன் நடித்த மாற்றுத்திறனாளி வேடத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங் 12 நாட்களில் தனக்கான பகுதிகளை நடித்து முடித்துக் கொடுத்துள்ளார். கிக் 2, பண்டகோ சேஷ்கோ போன்ற படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா போன்றவர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகின்றார்.