ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் நல்ல உடல்நிலையுடன் உயிருடன் தான் உள்ளேன். இணையதளங்களில், நான் இறந்தததாக வந்துள்ளது புரளி என்று ஜாக்கி சான் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில், தனக்கென்று ரசிகர் வட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், மாரடைப்பு காரணமாக, மரணமடைந்து விட்டதாக , பல்வேறு இணையதளங்களில் செய்தி வெளியானது.
கடந்த வாரத்தில், cnminformativo.com இணையதளத்தில் வெளியான இச்செய்தியை, பல்லாயிரக்கணக்கானோர், தங்களது பேஸ்புக் பக்கத்திலும் பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜாக்கி சானின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எனது இழப்பை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த துயரத்தை, என்னுடன் சேர்ந்து நீங்களும் உணர்வீர்கள் என்று நினைப்பதாக, ஜாக்கி சானின் மனைவிலின் பெங் ஜியாவ் கூறியிருப்பதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாக்கி சான், தனது வெய்போ அக்கவுண்ட் மூலம் தெரிவித்துள்ளதாவது, நான் நல்ல உடல்நிலையுடன் நலமாக தான் இருக்கிறேன். இதய நோய் காரணமாக, நான் மரணமடைந்து விட்டதாக வந்துள்ள தகவல் புரளி என்று குறிப்பிட்டுள்ளார். இணையதளங்களில் வெளியான தனது செய்தி குறித்து, நான் நிலைகுலைந்துவிட்டதாக, ஜாக்கி சான் அதில் குறிப்பிட்டுள்ளார்.