ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தாமிரபரணி பானு தனி கதாநாயகியாக நடித்த காலம் மலையேறிவிட்டது. அதனால் இப்போது தன்னை தேடிவரும் நல்ல வாய்ப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தமிழில் அவர் நடித்துவரும் சகுந்தலாவின் காதலன் படத்தில் கதாநாயகி சகுந்தலா கேரக்டரில் இவர் தான் நடிக்கிறார் என்றாலும் படத்தில் மற்றவர்களை போல அவருக்கும் அது ஒரு கதாபாத்திரம் மட்டும் தானாம்.
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் வந்துவிடாது என்பதை மலையாளத்தில் இம்மானுவேல் படத்தில் நடித்தபோதுதான் புரிந்துகொண்டாராம் பானு. “அந்தப்படத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணாக மூன்று, நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்தேன்.. முடி எல்லாம் கொட்டிப்போய் கிட்டத்தட்ட மொட்டைத்தலை கெட்டப்புடன் நடித்திருந்தேன். ஆனால் அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரை விட எனது கேரக்டர்தான் அனைவரிடமும் பாராட்டை பெற்றது. அதனால் ஹீரோயின் அல்லது குணச்சித்திர நடிகை என எதுவானாலும் எனக்கு ஓகே தான்” என்கிறார் பானு. சினிமாவின் சூட்சுமத்தை பானு கற்றுக்கொண்டார் என்றே தெரிகிறது.