ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் இன்றைய வளரும் இளம் நட்சத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த சிறிது காலத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவருக்கு வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
தற்போது நடித்து வரும் 'ரஜினி முருகன்' திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே சுமார் 40 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெற்று பல முன்னணி நடிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. சினிமாவில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் சிவகார்த்திகேயனின் சாதனை சாதாரணமானது அல்ல. அவர் தொலைக்காட்சியில் நடத்திய 'அது இது எது' நிகழ்ச்சியின் பல எபிசோடுகள் யு டியூப் இணையதளத்தில் பல லட்சம் பேரால் கண்டுகளிக்கப்பட்டு வருகிறது. தற்போது டிவிட்டர் வலைத்தளத்திலும் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.