ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..." என்ற வாக்கியத்தை கிண்டலடித்து விஜய் டி.வி ஒரு காமெடி நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்ப... அது பயங்கர வைரலாகி பரவியது. வடிவேலு காமெடியைப்போல இப்போது "என்னம்மா இப்படி பண்ணீங்களேம்மா..." என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
என்னம்மா இப்படி பண்றீங்களம்மா வாக்கியத்தை பல திரைப்படங்களில் காமெடியாக பயன்படுத்தி விட்டார்கள். ஒரு திரைப்படத்திற்கும் இதனையே தலைப்பாகவும் வைத்து விட்டார்கள். இந்த நிலையில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற தலைப்பிலேயே லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒரு நிகழ்ச்சி நடத்திக் கொடுக்கிறார்.
இன்றைய இளைஞர்கள் பல்வேறு கருத்துக்கள், நாட்டு நடப்புகளை பற்றி அலசும் இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒளிபரப்பாகும் தேதி, நேரம் இன்னும் முடிவாகவில்லை.