மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ள புறம்போக்கு படம் நாளை வெளிவருகிறது. இதில் கண்டிப்பான ஜெயிலர் வேடத்தில் நடித்திருக்கிறார் ஷாம். இந்த கேரக்டரை நானே இயக்குனர் ஜனநாதனிடம் கேட்டு வாங்கினேன் என்கிறார் ஷாம். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இயற்கை படத்தில் ஜனா சாருடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது நான் கொஞ்சம் வளர்ந்த நடிகர், ஜனா சார் இயக்குனராக அறிமுகம். அவர் சொல்லிக் கொடுத்ததில் அன்று பாதிகூட நான் நடிக்கவில்லை. அல்லது நடிக்க வரவில்லை. இப்போது அந்தப் படத்தை பார்த்தாலும் இந்தக் காட்சியில் இப்படி நடித்திருக்கலாமோ என்று தோன்றும். இன்று ஜனா சாரின் உயரம் வேறு. அவர் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்கள் இரண்டு கேப்டன்கள் ஒருவர் இயக்குனர் ஜீவா. அவர் இல்லை. அடுத்து ஜனா சார்.
இந்தப் படம் ஆரம்பிக்கிற செய்தி கேள்விப்பட்டு அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு இந்தப் படத்தில் நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஒரு காட்சி வருவதுமாதிரி இருந்தால்கூட போதும் இந்தப் படத்தில் நான் இருக்க வேண்டும் என்று சொன்னேன். சரி யோசிக்கிறேன் என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து கூப்பிட்டு அனுப்பினார். "பவர்புல்லான போலீஸ் கேரக்டர் வேறொரு பெரிய ஹீரோவை யோசித்து வைத்திருந்தேன். உங்க மேல நம்பிக்கை இருக்கு நீங்களே பண்ணுங்க" என்றார். அவரது நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன். என் வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் ஷாம்.