Advertisement

சிறப்புச்செய்திகள்

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன்! - ஷாம்

14 மே, 2015 - 10:33 IST
எழுத்தின் அளவு:
SP.Jananathan-is-my-captain-says-Shaam

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ''இயற்கை'' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ஷாம். அதன்பிறகு இப்போது அவர் இயக்கியுள்ள புறம்போக்கு படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இதில் ஆர்யா புரட்சியாளராக, விஜய்சேதுபதி தூக்குதண்டனை கைதியாக நடிக்க, ஷாம் ஜெயில் இன்ஸ்பெக்டர் ரோலில் நடித்திருக்கிறார்.


இந்த படத்தில் முதலில் ஷாமுக்கு எஸ்.பி.ஜனநாதன் வாய்ப்பே கொடுக்கவில்லையாம். ஆனால் அவர் படம் இயக்குகிற சேதி அறிந்து அவரை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் கேப்டன் என்று சொன்னாராம் ஷாம். அதோடு, எனக்கு கேரக்டர் எதுவும் இல்லையா கேப்டன் என்றும் உரிமையோடு கேட்டாராம்.


அதன்பிறகுதான் ஷாமுக்கு என்ன வேடம் கொடுக்கலாம் என்று யோசித்த ஜனநாதன், இன்னொரு நடிகருக்கு கொடுக்கயிருந்த இன்ஸ்பெக்டர் வேடத்தை அவருக்கு கொடுத்தாராம். அதனால்தான் இரண்டு ஹீரோ படமாக உருவாகயிருந்த புறம்போக்கு இப்போது மல்டி ஹீரோ கதையில் உருவாகியிருக்கிறதாம்.


மேலும், இந்த படத்தில் மூன்று ஹீரோக்கள் நடித்தபோதும் எங்களுக்குள் எந்தவித ஈகோவும் இல்லை. அவரவர் கேரக்டரை உணர்ந்து நடித்தோம். முக்கியமாக எஸ்.பி.ஜனநாதன் என்ற இயக்குனர் மீதுள்ள மரியாதை காரணமாகவும், அவர் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் எங்களது கேரக்டரைப்பற்றி எந்தவித கவலையும் படாமல் நடித்தோம்.


நான் இயற்கை படத்தில் நடித்தபோது அவர் படம் இயக்கும் திறனைப்பார்த்து வியந்தேன். அதனால்தான் அப்போதில் இருந்தே அவரை கேப்டன் என்று அழைத்து வருகிறேன். எப்போதுமே எஸ்.பி.ஜனநாதன்தான் என்னோட கேப்டன். என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல தகுதியான இயக்குனர் அவர். அந்த வகையில் என்னுடைய கேப்டனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் ஷாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in