ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருண் தேஜ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கஞ்சே என்பதை அனைவரும் அறிவர். இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் படம் ஆகும். அதாவது கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து எடுக்கப்படும் படமாகும். இதற்காக ரூ 2.5 கோடி செலவில் மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளது. அதில் அந்த கால ஜமீன்தார் வாழும் அரண்மனையும் அடங்கும். இந்த படக்குழுவினர் அடுத்ததாக ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.
ரஷ்யாவில் பீரியட் படம் எடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்ற கேள்விக்கும் அந்த படக்குழுவினர் பதில் அளித்துள்ளனர். அதாவது படத்துப்படி ஹீரோ அங்கு தான் கல்வி கற்கிறாராம். அதனால் தான் அங்கு ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டு உள்ளனராம். வருண் தேஜ் அறிமுகமான முகுந்தா படத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டியது நினைவிருக்கலாம். வருணுக்கு ஜோடியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கிறார். பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பார்ஸ்ட் பிரேம் என்ட்டர்டைன்மென்ட் சார்பாக ராஜீவ் ரெட்டி தயாரிக்கிறார்.