Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தூக்குத்தண்டனை கைதியாக விஜயசேதுபதி!

11 மே, 2015 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Vijay-Sethupathi-in-Purampokku-movie

ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இருந்து வரும் பழைய பார்முலாவை உடைத்துக்காட்டியவர் விஜயசேதுபதி. அந்த வகையில், பீட்சா படத்தில் ஒரு நெகட்டிவான ரோலில் நடித்த அவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், அதிகமாக பேசாமல் தன்னை சுற்றியிருப்பவர்களே பேசும் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்தார். அப்படி விஜயசேதுபதி நடித்த இரண்டு படங்களுமே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் நடிகரானார். அதோடு, ரம்மி படத்தில் இனிகோ ஹீரோவாக நடிக்க, அவரது நண்பனாக ஒரு கேரக்டரில் நடித்தார் விஜயசேதுபதி. இந்த மாதிரி ஹீரோயிசம் என்பதில் இருந்து விடுபட்டு, வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் விஜயசேதுபதி, தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள புறம்போக்கு படத்தில் தூக்குத்தண்டனை கைதியாக நடித்துள்ளார்.


இந்த படத்திற்காக விஜயசேதுபதியை, ஜனநாதன் முதல்நாள் தொடர்பு கொண்டபோது, படப்பிடிப்பில் இருந்த அவர் உடனே அவரை நேரில் சென்று சந்தித்ததோடு, உங்கள் படத்தில் என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் சார் என்றாராம். அதன்பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா ஒரு போராளியாக நடிக்கிறார். உங்களுக்கு தூக்குத்தண்டனை கைதி வேடம் என்றாராம் எஸ்.பி.ஜனநாதன். அதைக்கேட்டு சந்தோசமடைந்த விஜயசேதுபதி, அவர் கதை சொல்லச்செல்ல ஆர்வத்துடன் கேட்டவர், படப்பிடிப்பில் இருந்த நாட்களில் அந்த கதாபாத்திரம் எந்த மாதிரி பேச வேண்டும், நடக்க வேண்டும் என்பதையே முழுநேரமும் செய்து கொண்டேயிருந்தாராம். அதன்காரணமாக விஜயசேதுபதியின் ரோல் படத்திலும் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறதாம். அதனால், புறம்போக்கு என்னும் பொதுவுடமை படம் தன்னை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் விஜயசேதுபதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in