ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கண்டேன் படத்தில் பப்ளிமாஸ் போன்று காட்சியளித்த சாந்தனு, இப்போது வாய்மை படத்துக்காக தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றி தாடி, மீசை வைத்த கெட்டப்பில் நடித்துள்ளார். குறிப்பாக, மரத்தை சுற்றி டூயட் பாடி வந்த சாந்தனு இந்த படத்தில் ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது ஒரு மேல்தட்டு ஹீரோ நடிக்கும் அளவுக்கு சமுதாய பார்வை கொண்ட வேடமாம். அதோடு முதன்முறையாக சாந்தனு 3 விதமாக கெட்டப்பில் நடித்திருக்கிறாராம். ஒவ்வொரு கெட்டப்பிலும் ஒவ்வொரு மாதிரியான பர்பார்மென்சை கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.
இதற்கெல்லாம் மேலாக, ஒரு காட்சியில் அனல் பறக்கும் வசனத்தையும் ஆவேசமாக பேசி நடித்துள்ளாராம். அதில், இந்த நாட்டில் அரிசி, மிக்சி, கிரைண்டர் என எல்லாமே இலவசமாக கிடைக்கும். ஆனா நீதி இலவசமாக கிடைக்குமா? என்று கேட்பாராம். இந்த காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக பல கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளதாம்.