தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் |
பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது இயக்கி வரும் விழித்திரு படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தமயந்தி.
விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடிக்கும் விழித்திரு படத்துக்கு பாடல் எழுதியதைத் தொடர்ந்து ஒரு இசைஆல்பத்துக்கும் பாடல் எழுதினார். தமயந்தி எழுதிய முதல் பாடல் இடம்பெற்றுள்ள விழித்திரு படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஒருநாள் கூத்து என்ற படத்திற்கு பாடல் எழுதி உள்ளார். அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். திருடன் போலீஸ் வெற்றிப்படத்தை தயாரித்த கெனன்யா பலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.