ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ராமன் தேடிய சீதை படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன். அதன்பிறகு குள்ளநரிக்கூட்டம், பீட்சா, டமால் டுமீல் என சில படங்களில் நடித்தார். இப்போது இரண்டாவது படம், நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அதோடு, பாண்டியநாடு படத்தில் லட்சுமிமேனனுக்காக அவர் பாடிய பை பை பை பாடல் ஹிட்டான பிறகு பல படங்களில் பின்னணியும் பாடி வருகிறார். இருப்பினும், எதிர்பார்த்தபடி ரம்யா நம்பீசனுக்கு புதிய படங்கள் புக்காகவில்லை. இதனால் அவருக்கு மேனேஜராக இருந்தவர்களும் அவரை விட்டு விலகி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா நம்பீசன், இப்போது தமிழ் சினிமா மீது நம்பிக்கையிழந்து விட்டவர், தெலுங்கு, கன்னட படங்களில் கவனத்தை திருப்பிவிட்டார்.