ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை சில படங்களில் நடித்து அவர்களுக்கு நடிகை என்கிற ஸ்டார் வேல்யூ வந்ததும், கடை திறப்பு விழா, பள்ளி விழா, விளம்பர படங்கள் என்று பல வழிகளிலும் இறங்கி சம்பாதிக்கத் தொடங்கி விடுவார்கள்.
குறிப்பாக, விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு படத்தில் நடிக்கும் அளவுக்கு சம்பளம் கேட்பார்கள். அதுவும் ஒரேநாளில் அந்த தொகையை சம்பாதித்து விடுவார்கள். அதனால் சினிமாவில் ஓரிரு படங்களில் முகம் காட்டியதுமே நடிகைகளின் கவனம் விளம்பர படங்கள் பக்கம்தான் முதலில் திரும்பும்.
அந்த வகையில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்த பெங்காளி நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது டைரக்டர் சமுத்திரகனியின் அண்ணன் புதிதாக தொடங்கியிருக்கும் ஒரு நைட்டி கம்பெனி விளம்பரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் நடிக்க ஒரு நாள் கால்சீட் கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா அதற்கு சன்மானமாக நாலரை லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம்.
இது சினிமாவில் அவர் நடிக்கத் தொடங்கிய பிறகு நடிக்கும் முதல் விளம்பரம் என்றபோதும், அடுத்தடுத்து சினிமாவுக்கு இணையாக விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறாராம் நடிகை.