ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு-தனுஷ் இருவரும் போட்டியாளர்களாக இருந்தபோது, அடுத்த ரஜினி என்கிற ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வந்தனர். அப்போது சிம்பு தன்னை யங் சூப்பர் ஸ்டார் என்றும், தனுஷ் தன்னை இளைய சூப்பர் ஸ்டார் என்றும் குறிப்பிட்டு வந்தனர்.
ஆனால், அதையடுத்து ஆளாலுக்கு அடுத்த ரஜினி என்கிற அளவுக்கு பெரிய பில்டப்களை கொடுக்கத் தொடங்கியதால் சிம்பு, தனுஷ் இருவரும் அந்த அடைமொழிகளை நீக்கி விட்டனர். பின்னர், தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற போட்டி அஜீத், விஜய் ஆகிய இருவருக்குமிடையே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் நடித்திருந்தபோது, அவரது படம் ரஜினி படங்களுக்கு இணையாக வசூலித்துள்ளது என்று ரஜினியோடு சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு தனுஷே பப்ளிசிட்டி செய்து வந்தார். விளைவு, இப்போது ரஜினி முருகன் என்ற படத்தில் ரஜினி ரசிகராகவே நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்படத்தில் ரஜினி ஸ்டைலை பல காட்சிகளில் மிமிக்ரி செய்தும் நடித்துள்ளாராம்.
மேலும், ரஜினி நடித்த படங்களில் பாட்ஷா சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப பிடித்த படமாம். அதனால், அந்த மாதிரி ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் இருக்கிறதாம். இதை சினிமா வட்டார நண்பர்களிடம் கூறிவருகிறார் சிவகார்த்திகேயன்.