ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
AVR புரொடக்ஷன்ஸ் சார்பில் VR அன்புவேல் ராஜன் பெருமையுடன் தயாரிக்கும் படம் 'வீர தீர சூரன்'. ஷங்கர் தயாள் N இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குனர் சுசீந்திரனின் கதையமைப்பில், திரைக்கதை, வசனம் அமைத்து இயக்குகிறார் ஷங்கர் தயாள். தேசிய விருதுபெற்ற படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில், ஒளிப்பதிவாளர் திவாகர் ஒளிப்பதிவில், 'வீர தீர சூரன்' படத்திற்கு இசையமைக்கிறார் ' நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இசையமைப்பாளர் வேத் ஷங்கர்.
“என்னுடைய பல்வேறு தொழில் அலுவல்களுக்கு மத்தியில் நான் ஒரு சினிமா ஆர்வலனாகவே இருந்துள்ளேன். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் திண்ணமாய் இருந்த சமயத்தில் எதச்சையாக சுசீந்திரனிடமிருந்த இந்தக் கதையைக் கேட்டேன். சொல்வதற்கு வார்த்தையில்லாமல் அசந்துபோனேன், மற்றவை சொல்லி வைத்தாற்போல் நிகழ 'வீர தீர சூரன்' படத்தை நானே தயாரிக்கிறேன். விஷ்ணு விஷால் இக்கதைக்கு நாயகனாக கச்சிதமாய் அமைய மே மாத மத்தியில் முதல் கட்ட படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகவுள்ளது” எனக் கூறினார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன்.