ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு,தமிழ் மற்றும் இந்தி படங்களையும் இயக்கி வெற்றி கண்டுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபகாலமாக தனது அதீத கருத்து சுதந்திரதாலும் தனது படைப்புகளினாலும் சர்ச்சை இயக்குநர் என்று பெயரெடுத்துள்ளர். இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது 365 டேஸ் என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகின்றார். தமிழில் காவிய தலைவன் படத்தில் நாயகியாக நடித்த அணைகா சோடி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நாயகனாக நடிகர் ஸ்ரீவட்சா நடித்துள்ளார்.
அண்மையில் தணிக்கைக்குச் சென்ற இப்படம் தணிகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் வண்ணம் யு சான்றிதழ் பெற்றுள்ளது டோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏ மற்றும் யு/ஏ சான்றிதழ்களைப் பெற்ற அவரது படங்களில் முதன் முறையாக இப்படம் யு சான்றிதழ் பெற்றுள்ளமையே இந்த ஆச்சரியத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது. இப்படம் புதிதாக திருமணம் முடித்த தம்பதிகளின் திருமண வாழ்க்கைக் குறித்த படம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் மே 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.