ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரைப்படமான பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்து வரும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்களிலும் நடித்து வருகின்றார். இதில் ருத்ரமாதேவி படத்தில் தனக்கான பின்னணி பேசும் பணிகளில் தற்போது ராணா ஈடுபட்டு வருகின்றாராம்.
13 ஆம் நூற்றாண்டு காகதீய வம்ச தெலுங்கு ராணியான ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி வரும் ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்கா, ருத்ரமாதேவி ராணியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரினா, திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர்.
இளையராஜா இசையமைத்து உள்ள இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் உருவாக்கி வருகின்றது. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதகதியில் நடைபெறுவதால் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.