ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் பாலகிருஷ்ணாவின் லயன் பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவான இப்படம் உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிவடையாததால் மே 8 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறே தணிக்கைக்குச் சென்று யு/ஏ சான்றிதழும் பெற்றுவிட்டதால் லயன் படம் இவ்வாரம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
லயன் படம் மே 14 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தாமதத்திற்கான காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஹிந்தி நடிகை ராதிகா ஆப்டே மற்றும் தமிழ் நடிகை த்ரிஷா ஆகியோர் இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். மே 14 ஆம் தேதியாவது லயன் படம் திரைக்கு வருமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.