ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விதார்த், பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் அனைவரையம் திரும்பி பார்க்க வைத்தார். முதல் இடம், ஜன்னல் ஓரம், வெண்மேகம், ஆள், காடு போன்ற படங்களில் நடித்து வருபவர், இப்போது உலா மற்றும் விழித்திரு படங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அடுத்தப்படியாக காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில், குற்றமும் தண்டனையும் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க விதார்த்தின் சகோதரர்கள் தயாரிக்க இருக்கின்றனர்.
இதுநாள் வரை தனியாளாக இருந்து வந்த விதார்த், இப்போது இல்லற வாழ்வில் இணைய இருக்கிறார். ஆமாம் அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. விதார்த், திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை மணக்க இருக்கிறார். காயத்திரி வக்கீலுக்கு படித்து வருகிறார். இவரது தந்தை சிவானந்தமும் ஒரு வக்கீல். இவர்களது திருமண நிச்சயதார்த்தம், பழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. ஜூன் 11ம் தேதி திருப்பதி கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது. சென்னையில் ஜூன் 17ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது.