பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சலீம் படத்தை அடுத்து இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. நாம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்து சலீம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் க்ரைம் த்ரில்லராக மட்டுமின்றி இயல்பான ஆக்ஷன் காட்சிகளையும் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, அதிகமாக எக்ஸ்பிரஷன் வராத விஜய் ஆண்டனியின் பலம் பலவீனத்தைப் புரிந்து கொண்டு காட்சிகளை அமைத்திருந்தனர். அதுவே நாம் மற்றும் சலீம் படங்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமான பார்வையிலேயே மிரட்டினார் விஜய் ஆண்டனி. அவர் ஏற்ற கேரக்டருக்கு அடக்கிவாசித்த அந்தவகையான நடிப்பு பொருத்தமாகவும் இருந்து.
விஜய் ஆண்டனி தற்போது நடித்து இந்த வாரம் வெளியாக உள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தின் படம் முந்தைய படங்களைப்போல் இல்லாமல் காமெடிப்படமாக உருவாகி இருக்கிறது. சீரியஸ் முகம் கொண்ட விஜய் ஆண்டனியை வைத்து சிரிக்க வைக்கும் படமா? விஜய் ஆண்டனியின் பயமும் இதுதானாம். தன்னை ரசிகர்கள் காமெடியனாக ரசிப்பார்களா என்ற நடுக்கத்தில் இருக்கிறாராம். இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய காமெடியனாக நண்டு ஜெகன் நடித்திருக்கிறார். இவரது காமெடி மட்டுமல்ல, இவர் பேசுவதே செம கடியாய் இருக்கும். காமெடியே வராத விஜய் ஆண்டனி, கடிக்கும் ஜெகன் இருவரையும் வைத்து காமெடி படம் எடுத்த டைரக்டரை பாராட்டியே ஆகணும்!