ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மம்முட்டி நடித்த 'தெய்வத்திண்டே ஸ்வந்தம் க்ளீட்டஸ்' என்கிற படத்தை இயக்கிய மார்த்தாண்டன் என்பவர், இப்போது மீண்டும் மம்முட்டியை வைத்து 'அச்சா தின்' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்தப்படத்தில் மம்முட்டி ஜார்கண்ட்டை பூர்வீகமாக கொண்டவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வட இந்தியாவை சேர்ந்த மான்சி சர்மா என்பவர் நடிக்கிறார். இந்த மான்சி, முன்பு ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரில் அம்பாலிகா வேடத்தில் நடித்தவர்.
பஞ்சாபி பெண்ணான இவருக்கு கேரளா புதுசு.. ஆனால் கடவுளின் தேசத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட மான்சி கேரளாவின் அழகில் கிறங்கிப்போய்விட்டார்.. இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் மம்முட்டியை பற்றி அவர் கேள்விப்பட்டதெல்லாம் அவரது தென்னிந்திய தோழிகள் மூலமாகத்தானாம். அவர்கள் மம்முட்டியை மலையாள சினிமாவின் அமிதாப் பச்சன் என்று சொல்லி வைத்திருந்ததால் மம்முட்டியுடன் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தபோது உடனே ஒப்புக்கொண்டாராம்.
ஆரம்பத்தில் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த மம்முட்டியின் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து மிரட்சியடைந்த அவரை, உன்னை பார்க்கத்தான் அவர்கள் வருகிறார்கள் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தினாராம் மம்முட்டி. அதனால் சொந்த ஊரில் இருப்பதுபோல இருந்ததாம் மான்சிக்கு. ஆனால் ஷூட்டிங்கில் அவருக்கு தரப்பட்ட உணவு தான் அவரை ரொம்பவே படுத்திவிட்டதாம்.. அவர் நார்த் இண்டியன் என்பதால் அவருக்கு வட இந்திய உணவுகளை ஸ்பாட்டிலேயே செய்து கொடுக்கிறேன் என, எதையோ செய்து கொடுத்து மிரளவைத்து விட்டார்களாம். ஒருவழியாக பிஸ்கட், சாக்லேட்டை வைத்து அட்ஜஸ்ட் பண்ணினாராம் மான்சி சர்மா.