பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சூர்யா, நயன்தாரா நடித்துள்ள 'மாஸ்' படம் இந்த மாதம் 15ம் தேதி வெளிவருவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. அனேகமாக இந்த மாதம் 29ம் தேதியோ அல்லது ஜுன் 5ம் தேதியோதான் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 15ம் தேதி ஜோதிகா நடித்துள்ள '36 வயதினிலே' படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா மீண்டும் ரீ-என்ட்ரியாகியுள்ள '36 வயதினிலே' படத்தின் இசை வெளியீடு சில வாரங்களுக்கு முன்பே நடந்தது. அதோடு அனைத்து வேலைகளும் முடிந்து படமும் வெளியாகத் தயாராக உள்ளது என்கிறார்கள். அதனால், முதலில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் 'மாஸ்' படத்தை வெளியிடலாம் என்றிருக்கிறார்களாம்.