விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
கமல்ஹாசன் நடித்து இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ள படம் 'பாபநாசம்'. மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து 2013ம் ஆண்டு வெளிவந்து 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த மாபெரும் வெற்றிப் படம். இந்தப் படத்தின் ரீமேக்கில் மிகவும் குறுகிய காலத்தில் கமல்ஹாசன் நடித்து முடித்துக் கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. டிரைலரைப் பார்த்த அதி தீவிர திரைப்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. டிரைலரின் பல காட்சிகளில் கமல்ஹாசனின் ஒட்டு மீசை அப்படியே அழகாகத் தெரியும் அளவில் படமாக்கப்பட்டுள்ளது. மேக்கப் யதார்த்தத்துக்குப் பெயர் போன கமல்ஹாசன் படத்தில் இப்படி இருப்பது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தன்னுடைய படத்தில் தலை முடியாக இருந்தால் கூட அதில் அதிக கவனம் செலுத்துபவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் மேக்கப் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறையினருக்கும், பல திரைக்கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குபவர். ஏற்கெனவே, 'பாபநாசம்' படத்தின் சில புகைப்படங்கள் மீடியாக்களுக்குக் கொடுக்கப்பட்ட போது அவருடைய மேக்கப்பும், தோற்றமும் பேச்சைக் கிளப்பியது. அது ஏதோ சில காட்சிகளில் மட்டும் இருக்கலாம் என நினைத்தவர்கள்தான் அதிகம்.
ஆனால், இப்போது டிரைலரைப் பார்த்ததும் படம் முழுவதும் அப்படியான தோற்றத்தில்தான் கமல்ஹாசன் இருப்பாரோ என்ற ஒரு சந்தேகம் இயல்பாகவே எழுந்துள்ளது.
தயாரிப்பாளரும், இயக்குனரும் படத்தை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இருந்திருந்தாலும், கமல்ஹாசன் இப்படிச் செய்யலாமா...?