ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் தமிழகத்தில் வௌியாகவிட்டாலும் துபாய் உள்ளிட்ட வௌிநாடுகளில் ரிலீஸாகவிட்டது. முன்னதாக உத்தம வில்லன் படத்தை கமல்ஹாசன் தன் திரையுலக நண்பர்கள் சில பேருக்கு திரையிட்டு காட்டியுள்ளார். அதில் நடிகை குஷ்புவும் ஒருவர். இன்று காலையே தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தம வில்லன் படத்தை பற்றி பாராட்டி தள்ளிவிட்டார்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, உத்தம வில்லன் படத்தை கமல் சாருடன் இணைந்து பார்க்கும் அருமையான பாக்கியம் கிடைத்தது. படத்தில் இடம்பெற்றுள்ள நடனம், வசனம் உள்ளிட்ட எல்லாமே பிரமாதமாக வந்துள்ளது. குறிப்பாக விஷூவல்களை பார்த்து பிரமித்து போய்விட்டேன். தமிழ் சினிமா இப்படியொரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. எதற்காக கமல் சாரை மாஸ்டர் என்று சொல்கிறோம் என்பதை இந்தப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். படத்தில் அவரது கண்கள் பேசுகின்றன. மனதை உலுக்கும் ஒரு படம் உத்தம வில்லன் என்று கூறியுள்ளார்.